திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 12 மார்ச் 2018 (13:10 IST)

குரங்கணி தீ விபத்தில் மரணமடைந்த புது மண தம்பதி - அதிர்ச்சி செய்தி

தேனி குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் புது மண தம்பதி மரணமடைந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.

 
தேனி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுக்கு சென்னையை சேர்ந்த 27 பேரும், ஈரோட்டை சேர்ந்த 12 பேரும் இரு புரிவுகளாக மொத்தம் 39 பேர் மலையேற சென்றனர். அந்நிலையில், நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 27 பேரை மீட்டனர்.   
 
ஆனால், பதட்டத்தில் பள்ளத்தாக்கில் விழந்த 9 பேரை மீட்க முடியவில்லை. எனவே, அவர்கள் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர். இதில், ஈரோட்டை சேர்ந்த விவேக் மற்றும் திவ்யா ஆகியோர் புது மண தம்பதி என்பது தெரியவந்துள்ளது.
 
ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த விவேக் துபாயில் வேலை செய்து வந்தார். அவர் கோபிசெட்டிபாளையத்தில் கல்லூரி விரிவுரையாளரக பணிபுரிந்து வந்த திவ்யாவை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்தார். தம்பதி இருவரும் இன்னும் ஒரு மாதத்தில் துபாய் செல்ல இருந்த நிலையில், இந்த குரங்கணி மலைப்பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு சென்றுள்ளனர். இந்த தகவலை விவேக் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால், தீ விபத்தில் சிக்கி விவேக்-திவ்யா தம்பதி பரிதாபமக உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.