செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (12:48 IST)

கடலில் கலந்த Surfactants: பொங்கி ஒதுங்கும் நுரை ஆபத்தானதா??

சென்னை அடையாறு கடற்கரை ஓரம் ஒதுங்கும் நுரை ஆபத்தானவையா என தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரிய ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளது. 
 
சென்னை அடையாறு கடற்கரையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக சோப்பு நுரை போன்று நுரைகள் பொங்கி காணப்படுகிறது. இதனை மக்கள் ரசித்தாலும் இது ஆபத்தானவையா என தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியம் கடற்கரையின் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரையில் உள்ள நுரைகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியது. 
 
தற்போது ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அடையாறு ஆற்றின் முகதுவாரத்தில் பல நாட்களாக தேங்கி, மக்கும் நிலையிலும், அழுகிய நிலையிலும் இருந்த நுண்ணுயிர்கள் மற்றும் கரையோரம் படிந்திருந்த சர்பாக்டன்ட்ஸ் (Surfactants) கல்ந்து கடலுக்குள் சென்றுள்ளது. 
 
இந்த சர்பாக்டன்ட்ஸ்தான் நுரையாகியுள்ளதாவும், கடல்நீரில் இயல்பாகவே ஆக்சிஜன் அளவு இருப்பதால், இந்த நுரையால் அப்பகுதி மக்களுக்கும் கடலில் உள்ள உயிரினங்களுக்கும் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.