திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 மார்ச் 2018 (19:35 IST)

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வெயில்....வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
எதிர்பார்த்த அளவு மழை பொழியவில்லை என்றாலும் வெயிலுக்கு இந்த பஞ்சம் இல்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயில் கடுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொதுவாகவே வெயில் சுட்டெரிக்கும். 
 
வழக்கமான வெப்ப நிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களில் வெப்பமும் அதிகரித்து வருகிறது. மதுரை, திருத்தணி ஆகிய இடங்களில் கோடை வெப்பம் அதிகளவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.