புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (18:18 IST)

சுப்பிரமணிய சுவாமியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்: கன்னியாகுமரியில் பரபரப்பு

கன்னியாகுமரியில் சுப்பிரமணிய சுவாமியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸைச் சேர்ந்த 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, பாஜக-வைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி. சுப்ரமணிய சுவாமி, ராகுல் காந்தி போதை பொருள் பயன்படுத்துபவர் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார். இதனை தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸார் திரண்டு சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து, அவரின் உருவ பொம்மையை எரித்து போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்து, அங்கு வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.

இந்த போரட்டத்திற்கு, திங்கள் நகர் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.