1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (13:10 IST)

ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம்..! தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்.!! கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!!!

student
திருவள்ளூர் அருகே ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி  பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் தடம் எண் 505 பேருந்தில்,  திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் டிஆர்பிசி பள்ளி மாணவர்கள் 12 பேர் ஏறியுள்ளனர்.
 
அவர்கள் பேருந்து நிலையத்திலிருந்து  திருவள்ளுர் அடுத்த ஈக்காடு வரை ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்தும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பேருந்து ஓட்டுனர், நடத்துனர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பு ரகசிய வாட்ஸ் ஆப் புகார் எண்ணிற்கு வீடியோ காட்சி மூலமாக புகார் அளித்தனர்.
மாணவர்கள் தொடர்ந்து பேருந்தில் ஆபத்தான முறையில் படியில் தொங்கிய படியும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரகளை செய்து வருவதை பலமுறை பேருந்து  ஓட்டுனர், நடத்துனர் கண்டித்தும்  அவர்களை, மாணவர்கள் தரைக்குறைவாக பேசி வருவதாகவும், அதில் சில மாணவர்கள் தொடர்ந்து போதையில் ரகளையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அத்தகைய மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.