செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:29 IST)

ஆசிட் பட்டு பள்ளி மாணவிகள் காயம்… அரசு பள்ளியில் நடந்த விபத்து!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் பள்ளி ஆய்வகத்தை சுத்தம் செய்த போது ஆசிட் கீழே விழுந்து மாணவிகள் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்த போது அங்கிருந்த ஆசிட் விழுந்து தெறித்து 4 மாணவிகள் மேல் பட்டு காயமடைந்துள்ளனர்.

பாமா, அதிஷா, ஜனனி, நித்யா ஆகியோருக்கு காயம் பட்ட நிலையில் அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பாமாவுக்கு கண்ணில் ஆசிட் பட்டு காயம் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.