ஃபேர்வெல் பார்ட்டியில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவிகள்: அதிர்ச்சி தகவல்
ஃபேர்வெல் பார்ட்டியில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவிகள்: அதிர்ச்சி தகவல்
கல்லூரி மாணவர்கள் தான் அவ்வப்போது மோதிக் கொண்டு வருகிறார்கள் என்றால் கல்லூரி மாணவிகளும் ஒருவரோடு ஒருவர் குடுமிப்பிடி சண்டை போட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புதுவையில் உள்ள முத்தியால்பேட்டை அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஃபேர்வெல் பார்ட்டி நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் மற்ற துறை மாணவிகளும் கலந்து கொண்டதால் பேர்வெல் பார்ட்டி நடத்திய மாணவிகளுக்கும், மற்ற துறை மாணவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது
இதனை அடுத்து எங்கள் நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்படி வரலாம் என்று கூறி மாணவிகள் ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டது கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஆசிரியர்கள் மாணவிகளை சமாதானம் செய்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன