திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மே 2022 (12:11 IST)

அப்போ உக்ரைன்.. இப்போ பின்லாந்து..! – பவர் சப்ளையை நிறுத்தி ரஷ்யா தொல்லை!

Pudin
நேட்டோ அமைப்பில் இணைய பின்லாந்து விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் பின்லாந்திற்கான மின் சப்ளையை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய இருந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது. கடந்த சில மாதங்களாகவே இந்த போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு எச்சரிக்கை விடுக்கும் தோனியில் பேசியுள்ள ரஷ்யா, பின்லாந்துக்கு வழங்கி வந்த மின் சப்ளையை நிறுத்தியுள்ளது.

பின்லாந்தின் மின் சப்ளையில் 10 சதவீதம் ரஷ்யாவிடம் பெறப்படுகிறது. ஆனால் அதை பற்றி அலட்டி கொள்ளாத பின்லாந்து, ரஷ்யா மின்சாரம் வழங்காததால் பின்லாந்துக்கு பாதிப்பில்லை என்றும், தேவையான கூடுதல் மின்சாரத்தை ஸ்வீடனில் இருந்து நாங்கள் பெற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளது.