திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (15:14 IST)

கல்லூரியில் ரவுடியிஸம் காட்டிய மாணவர்கள் கொலை வழக்கில் கைது...

கோவையில் புறநகர் பகுதியில் உள்ளது ஒரு பிரபலமான தனியார் பொறியியல்  கல்லூரி ( அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளது). இங்கு ஆயிரக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் இரண்டு மாணவ கோஷ்டிகளுக்கு இடையே எப்போதும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில்  அஷ்ரப் என்ற மாணவனிடம் தினகரன் என்பவன் வம்புக்கு இழுக்க... இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
அப்போது தினகரன் பரம ரவுடி போல தான் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து அஷ்ரப் தோளிலும் மார்பிலும் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
 
அதன் பின் சக தோழர்கள் மீட்டு அஷ்ரபை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டார்.
 
இந்தக் கொலை வழக்கில் தினகரன்,சரவணக்குமார், நிதிஷ்குமார் ஆகியோ மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.