அனிதா மரணம் ; சென்னை அண்ணாசாலையில் போரட்டம் ; போக்குவரத்து பாதிப்பு


Murugan| Last Modified சனி, 2 செப்டம்பர் 2017 (11:45 IST)
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தற்போது தமிழகத்தில் பூதாகாரமாய் வெடித்துள்ளது.

 

 
அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர் சிலரும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ளது. 
 
இந்நிலையில், நேற்றும் மதுரையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியிலும் இளைஞர்கள் தீயை ஏற்றி அவரது மரணத்திற்கான நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டம் இன்று சேலம், மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவி வருகிறது. 
 
சென்னை அண்ணாசாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் சென்னை கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :