ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (15:22 IST)

கறவை மாடுகளுடன் வரும் மார்ச் 28 முதல் போராட்டம்- உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்

milk
தனியார் நிறுவனங்கள் பாலின் கொழுப்பு அளவைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.47 வரை வழங்குகிறது. தமிழ் நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் ரூ.35 முதல் ரூ.44 என்ற விலையில் கொள்முததல் செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆவின் நிறுவனம கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி வழங்க வேண்டுமென்று பால் உற்பட்தியார்கள் பால் நிறுத்தப் போராட்டில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், பால்உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பால் கொள்முதல் விலையை   உயர்த்தக்கோரி வரும் 28-30 வரை கறவை மாடுகளுடன் போராட்டம் நடைபெறும் பால் உற்பத்தியாளார் சங்க  மாநில தலைவர் முகமது அலி கூறியுள்ளார்.

மேலும், லிட்டருக்கு ரூ7 உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்