சிபிஐ-க்கு சிலைக்கடத்தல் வழக்கு: திருப்பி அனுப்பிய மத்திய அரசு

Last Modified புதன், 29 ஆகஸ்ட் 2018 (20:14 IST)
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி சமீபத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் ஒன்'றை அனுப்பியது. இந்த கடிதத்தை மத்திய அரசு தற்போது திருப்பி அனுப்பிவிட்டது.

சிலை கடத்தல் வழக்கின் எப்.ஐ.ஆர். உள்ளிட்ட வழக்கின் முக்கிய ஆவணங்கள் பரிந்துரை கடிதத்துடன் இணைக்கப்படவில்லை என்றும் வெறும் பரிந்துரை கடிதம் மட்டுமே தமிழக அரசு அனுப்பியதால் அந்த பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


முன்னதாக சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் இந்த உத்தரவு ஒரு நிமிடம் கூட விசாரணை செய்ய தகுதியில்லாத அரசாணை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :