1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (11:07 IST)

ஆர்.கே.நகர் எனக்கு வளர்ப்பு பிள்ளை மாதிரி: மு.க.ஸ்டாலின்

சென்னை ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷூக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வரும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்றும் பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார். ஒருசில கருத்துக்கணிப்புகள் திமுகதான் ஆர்.கே.நகரில் வெற்றி பெறும் என்று கூறியிருப்பதால் ஸ்டாலின் கூட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், 'கொளத்தூர் செல்லப்பிள்ளை என்றாலும் ஆர்.கே. நகரை வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சிபெற வைப்பேன் என்று இந்த தொகுதி வாக்காளர்களுக்கு உறுதி கூறுவதாக கூறினார். மேலும் அதிமுக அரசை மாற்றுவதற்கு தொடக்கப்புள்ளியாக ஆர்.கே நகர் தேர்தல் அமையட்டும் என்றும், மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக தமிழக அரசு பறிகொடுத்து வருகிறது என்றும் அனைத்து நிலைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரை செல்லப்பிள்ளை என்றும், ஆர்.கே.நகரை வளர்ப்பு பிள்ளை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளது அந்த தொகுதி மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது என்பது சமூக வலைத்தளங்களில் பதிவாகி வரும் கருத்துக்களில் இருந்து தெரியவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.