புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 மே 2018 (08:19 IST)

கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை - ஸ்டாலின்

காவிரிக்காக கமல்ஹாசன் ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்கப்போவதில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இதற்கு காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்று பெயரிடப்பட்டுள்ளன. இந்த கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜயகாந்த், தமிழிசை, டிடிவி தினகரன், வேல்முருகன், ஸ்டாலின் ஆகியோருக்கு கமல் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், காவிரிக்காக கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகள்  பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்தார்.