முக.ஸ்டாலின் நகைச்சுவை நடிகராக மாறி வருகிறார் - செல்லூர் ராஜூ
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 40 படுக்கைகள் கொண்ட கூடிதல் கட்டிடம் கட்ட கால்கோல் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, கலெக்டர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது செல்லூர் ராஜூ பேசியதாவது:
அமைச்சர்கல் யார் வேண்டுமானாலும் அரசியல் கருத்துக்கள் பேசலாம். ஆனால் கூட்டணி பற்றி ஆட்சிமன்ற குழுக்கள் மற்றும் தலைமை தான் முடிவு செய்யும்.மட்டுமல்லாமல் தேர்தல் நேரத்தில் தான் இதுபற்றி முடிவு எடுக்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தற்போது பணியாற்றி வருகிறோம்.
40 தொகுதிகளிலும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தற்போது ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஸ்டாலின் நகைச்சுவையாக பேசிவருகிறார். நகைச்ச்குவை நடிகராக மாறி வருகிறார்.எம்ஜிஆர் இருக்கும் வரை 14 ஆண்டுகள் வனவாசம் சென்றது திமுகதான். இப்போது ஊர்களுக்கு சென்று குறை கேட்கும் தான் துணைமுதல்வராக இருந்த போது இவ்வாறு கேட்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தை மட்டுமே நினைக்கும் கட்சியாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.