திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (20:22 IST)

புதுமணத் தம்பதியரை நேரில் வாழ்த்திய ஸ்டாலின்!

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திமுகவின் செயல்பாட்டிற்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இன்று  திருக்குவளை அரசு மருத்துவமனையில் பேறுகால அவசரச் சிகிச்சைப் பிரிவைத் திறந்துவைக்க முதல்வர் ஸ்டாலின் திருக்குவளை சென்றார். அங்கு செல்லும் பின்னவாசல் திருமண மண்டப வாசலில் மணக்கோலத்தில் நின்றிருந்த எஸ்.ஆர்.சோப்ரா - எஸ்.இரமா ஆகியோரைப் பார்த்த முதல்வர் ஸ்டார்லின் தனது காரை நிறுத்தி மணமக்கள் அருகில் சென்று அவர்களை வாழ்த்தினார். பின்னர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திருமணத்தையும் நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சி அங்கிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் செயலுக்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.