வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (14:31 IST)

ஸ்டாலின் வீசும் பந்து க்ளின் போல்டா? நோ பாலா?

ஸ்டாலின் வீசும் பந்து அதிமுகவை க்ளின் போல்ட் ஆக்கிவிடும் என முன்னாள் அமைச்சரும், ஸ்டாலின் வீசும் பந்து நோ பால் ஆகிவிடும் என்று இந்நாள் அமைச்சரும் சட்டசபையில் செய்த வாதத்தால் சட்டமன்றத்தில் கலகலப்பு ஏற்பட்டது.
 
தற்போது தமிழக சட்டசபையில் பட்ஜெட் குறித்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பட்ஜெட் விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான பொன்முடி, 'ஸ்டாலின் வீசும் பந்தில் அதிமுக அரசு க்ளீன் போல்ட் ஆகிவிடும் என்று கூறினார்.
 
இதனையடுத்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், 'ஸ்டாலின் வீசும் பந்து நோபால் ஆகிவிடும் என்பதால் அதிமுக அரசுக்கு எந்த பிரச்சனையும் வராது' என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, 'மைதானத்திற்குள் வராமலே ஸ்டாலின் பந்து வீசிக் கொண்டிருப்பதாகவும், ஸ்டாலின் மைதானத்துக்குள் வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறினார்.
 
கிரிக்கெட்டை வைத்து முன்னாள் அமைச்சரும், இந்நாள் அமைச்சரும் பேசியதால் சட்டமன்றம் சிரிப்பொலிகளால் கலகலப்பு ஆனது