செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2019 (14:20 IST)

ரஜினியை நினைச்சு நீங்க பயப்பட வேண்டாம்! : சிரஞ்சீவிக்கு பதில் கொடுத்த கராத்தே தியாகராஜன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்க தீவிரமாக தயாராகி வரும் நிலையில் ”இந்த அரசியல் பயணமெல்லாம் வேண்டாம்” என சிரஞ்சீவி ரஜினிக்கு சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியும், அவர் ரசிகர்களும் கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். சமீபத்தில் அரசியல் சாணக்கியரான பிரசாந்த் கிஷோரை ரஜினி சந்தித்து வந்தார். இதனால் ரஜினி கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்க்கொண்டிருப்பார். விரைவில் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்குவது குறித்து பேசிய தெலுங்கு நடிகரும், ரஜினியின் நண்பருமான சிரஞ்சீவி “அரசியலில் ஈடுபட்டு நானும் என் தம்பியும் அடைந்த இன்னல்கள் எக்கசக்கம். தோல்விகள், அவமானங்கள் எல்லாவற்றையும் தாண்டி மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் அரசியலில் செயல்படுங்கள்” என்று அறிவுரை கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கராத்தே தியாகராஜன் “தனது நண்பர் மேல் உள்ள அக்கறையில் சிரஞ்சீவி அப்படி கூறியிருக்கிறார். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்” என்று கூறியுள்ளார்.

ரஜினி குறித்த செய்திகள் ஒவ்வொரு முறை வைரலாகும்போதும் அதற்கு ரஜினி பதில் அளிக்கிறாரோ இல்லையோ, உடனே கராத்தே தியாகராஜன் வந்து ஆஜராகி விடுகிறார் என அரசியல் வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.