வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (12:12 IST)

முதல்வர் வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்: போலீசார் விசாரணை!

arrest
மேற்கு வங்க மாநில முதல்வர் வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்ம நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து தாகவும் அவர் அதிகாலை வரை அந்த வீட்டின் உள்ளேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு நுழைந்த அந்த மர்ம நபரை அதிகாலையில் கண்டுபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை செய்தபோது அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது 
இருப்பினும் அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை வரை மர்ம நபர் ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது