திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வெள்ளி, 1 ஜூலை 2022 (17:44 IST)

கரூருக்கு முதல்வர் வருகின்றார் - வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்களால் தமிழக அளவில் பரபரப்பு

karur
கரூருக்கு முதல்வர் வருகின்றார் - வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்களால் தமிழக அளவில் பரபரப்பு
 
கரூர் மாவட்டத்திற்கு நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க இன்று இரவே கரூர் மாநகருக்கு வருகை தரும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அவர் முதல்வரான பின்னர் முதல் முதலில் கரூர் வருகின்றார். இந்நிலையில், அதே சமயத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கருப்பு கொடிகளை வீட்டில் ஏந்தி நூதன முறையில் அறவழியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி, ஜல்லிவாட நாயக்கனூரில் உள்ள தொட்டிய நாயக்கர் சமூக மக்களின் வழிபாடு கோயிலான வீரசக்கதேவி ஆலயம் அமைந்துள்ள, மந்தை நிலங்களில் இலங்கை மக்களின் முகாம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகம் சிறிய முயற்சியினை எடுத்து வரும் நிலையில் பல்வேறு மனுக்கள் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை, இந்த நிலையில் இன்று பேனர் அடித்து இன்று ஒரு நாள் மட்டும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் வருகை ஒரு புறம் இருக்க கருப்பு கொடி போராட்டம் மற்றொரு புறம் என்றவாறு, இந்த சமூகத்தினர் ஏற்கனவே எடுத்த முடிவு ஆகும் என்கின்றனர்