இதுதான் எடப்பாடி மற்றும் ஓ.பிஎஸ் அரசு - சீறும் செந்தில் பாலாஜி (வீடியோ)

Last Modified திங்கள், 16 ஏப்ரல் 2018 (10:45 IST)
ஒரு பேனரில் கூட மத்திய அரசிற்கு எதிரான தனது கண்டனத்தை தெரிவிக்க முடியாத அரசு தான் எடப்பாடி மற்றும் ஒ.பி.எஸ்-இன் அரசு என கரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

 
கரூரில் வரும் 18ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், அந்த மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக்கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி சிறப்புரையாற்றினார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தமிழகத்தின் ஒவ்வொரு உரிமைகளை மத்திய அரசிடம் தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு அடமானம் வைத்து வருகின்றது என புகார் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :