அதிமுக எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்

Last Modified திங்கள், 9 ஏப்ரல் 2018 (18:42 IST)
அதிமுகவை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரனை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சமீபத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், பிரபு எம்.எல்.ஏ ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பிரபு எம்.எல்.ஏ தியாகதுருகம் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆகிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை அடுத்து பிரபு எம்.எல்.ஏ, டிடிவி தினகரனின் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து 18க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனை ஆதரித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ தினகரனின் அணியில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :