திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 17 ஜனவரி 2024 (13:59 IST)

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மேல்முறையீடா.. ஆனால் ஆனந்த் வெங்கடேஷ் தான் விசாரிப்பாராமே..!

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நான்காவது முறையாக மறுக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி மிகவும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த முறை எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் நீங்கள் இன்று இரவு வீட்டில் இருப்பீர்கள் என திமுக வழக்கறிஞர்கள் ஆறுதல் கூறியதாகவும் ஆனால் அன்று வந்த தீர்ப்பு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிந்ததும் அவர் இரவு முழுவதும் தூங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஜாமின் மனு தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டால் அந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தான் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அவர் விசாரித்தால் இந்த ஜென்மத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மனு கிடைக்காது என்று திமுக வழக்கறிஞர்களே கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா அல்லது அவர் நிரந்தரமாக சிறையில் தான் இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva