திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 13 ஜனவரி 2024 (08:15 IST)

நுரையீரலில் இன்பெக்‌ஷன்… ஆக்ஸிஜன் ட்யூப்போடு பிக்பாஸ் விமர்சனம் செய்த ரவீந்தரன்!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததை ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ரவீந்தர் சோகமான பதிவுகளை போட்டு மனைவியை பிரிந்துவிட்டது போல் மறைமுகமாக பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் சமீபத்தில்  கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இப்போது ரவீந்தரன் தன்னுடைய பிக்பாஸ் விமர்சன நிகழ்ச்சியில் ஆக்ஸிஜன் ட்யூப் இணைத்துக்கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் தனக்கு நுரையீரலில் இன்பெக்‌ஷன் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஐசியுவில் சில நாட்கள் இருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். ஆக்ஸிஜன் ட்யூப் உதவியோடு வந்து இப்படி பிக்பாஸ் விமர்சனம் செய்ய வேண்டுமா என ரசிகர்கள் அவரை திட்ட தொடங்கியுள்ளனர்.