வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூன் 2018 (15:16 IST)

விஜய் அரசியல் குறித்த போஸ்டர்கள்: செல்லூர் ராஜூ கூறும் விளக்கம்

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்ட நடிகர் அரசியலுக்கு தொடரும் வந்து கொண்டிருக்கும் நிலையில், விஷாலுக்கு முன்பே அரசியலுக்கு வருவதாய் முன்னிறுத்தப்பட்டவர் நடிகர் விஜய்.


ஆனால், திரைப்படத்தில் மட்டும் நடித்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார்.  ஆனால், இவரின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருவது போல பல வருடங்களாக போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். இந்த ஆண்டும் விஜய் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் வருங்கால முதல்வரே, நாளைய தமிழகமே என்று கூறி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.



இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜுடம் விஜய் போஸ்டர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில்,விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதல்வர் என விளம்பரபடுத்தியுள்ளனர். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார்.