திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 மே 2022 (14:42 IST)

எல்.ஐ.சி பங்குகளை உடனே விற்றுவிடுங்கள்: பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்

lic
எல்ஐசி பங்குகள் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பங்குகளை 949 ரூபாய் கொடுத்து எல்ஐசி பாலிசிதாரர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கினர். ஆனால் எல்ஐசி பங்குகளை வாங்கியவர்களுக்கு தற்போது ஒரு பங்குக்கு நாற்பத்தி ஒரு ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்றும் எல்ஐசி பங்கின் விலை மேலும் 25 ரூபாய் என்று சரிந்துள்ளது என்றும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
எனவே எல்ஐசி பங்குகள் தொடர்ந்து இன்னும் சரிந்து வரும் என்பதால் அந்த பங்குகளை இப்போதைய விலைக்கு நஷ்டத்துடன் விற்றுவிட்டு எல்ஐசி பங்குகளில் இருந்து வெளியேறி விடுங்கள் என்றும் இன்னும் அதை வைத்து இருந்தால் அதிக நஷ்டம் ஏற்படும் என்றும் ஆனந்த் சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது