திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 மே 2022 (14:13 IST)

கருணாநிதி சிலையை வைக்க நீதிமன்றம் தடை!

karunanidhi
திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திருவண்ணாமலை கிரிவல பாதையை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க முயற்சி செய்வதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது 
 
இந்த விசாரணையின்போது ’எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தீவிரமானவை என்றும் கிரிவல பாதையை பயன்படுத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் கூறி நீதிபதிகள் கருணாநிதி சிலை வைக்க தடை விதிக்க உத்தரவிட்டனர்
 
 மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி இன்றைய நிலவரப்படி கருணாநிதி சிலை வைக்கப்பட இருக்கும் இடம் உண்மையிலேயே ஆக்கிரமிப்பில் உள்ளதா இல்லையா என்பது குறித்து மே 19ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது