ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (09:27 IST)

40 வருசமா ஓசி சவாரி... காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட சீமான்!!

காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தலில் போட்டியிட்டால் நாம் தமிழரை விட  குறைவாகவே வாக்குகளை பெறுவர் என சீமான் தெரிவித்துள்ளார். 
 
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சீமானின் நம தமிழர் கட்சி சுமாரான வெற்றியை மட்டுமே பதிவு செய்தது. ஆனால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்றியத்தில் ஒரு இடம் கிடைத்ததால் நாம் தமிழர் பின்தங்கி விடவில்லை. கடந்த முறை 4 சதவீதமாக இருந்த வாக்குகள் இந்த முறை 10 சதவீதமாக உயர்ந்திருக்கின்றன என பேட்டி அளித்தார். 
 
இதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேட்டியளித்துள்ளார். சீமான் கூறியதாவது, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ளது. 
 
ஆனால், நாம் தமிழர் கட்சி நோட்டாவுடன் மட்டுமே போட்டி போட முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கூறினார். நாங்களாவது தேர்தலில் தனித்து நின்று சுமார் 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். 
 
ஆனால் காங்கிரஸ் கட்சி 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மீது குதிரையேறியே தேர்தலை சந்தித்துள்ளனர். தனித்து நின்றால் நாங்கள் பெறும் வாக்குகளை விட குறைவாகவே பெறுவீர்கள் என பேசியுள்ளார்.