ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (21:04 IST)

காங்கிரஸ் கூட்டணி குறித்து ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? பகீர் தகவல்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கிட்டத்தட்ட விலகி விட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. டிஆர் பாலு, துரைமுருகன் போன்றவர்கள் பேசிய பேச்சில் இருந்து மீண்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணி இணையும் வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது
 
இருப்பினும் ஸ்டாலின் தரப்பு இந்த விஷயத்தில் அமைதி காத்து வருகிறது. கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை கேள்வி எழுப்பிய போதிலும் ஸ்டாலின் அமைதி காத்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.
 
இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை பதவியில் இல்லாத திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால் அதன் பின்னர் தொண்டர்களை சமாதானப்படுத்துவது ரொம்ப கடினம் என்றும் மீண்டும் ஒரு 5 வருடம் காத்திருக்க தன்னால் முடியாது என்பதுதான் ஸ்டாலின் எண்ணமாக உள்ளது
 
எனவே 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் நோக்கமாக இருப்பதால் அவர் அமைதி காத்து வருவதாகவும் இருப்பினும் இந்த விஷயத்தை அவர் காங்கிரஸ் மேலிடத்தில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விரைவில் அழகிரி தமிழக காங்கிரஸ் பதவியிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது