செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 மார்ச் 2021 (11:12 IST)

ஒருத்தர் ஏந்துனா பிச்சை..பலர் ஏந்தினால் இலவசம்! – சீமான் பேச்சு!

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நா.த.க சீமான் ஒருவர் கையேந்தினால் பிச்சை.. பலர் ஏந்தினால் இலவசம் என கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் நா.த.க சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் “ஒருவர் கையேந்தினால் பிச்சை. அதுவே பலர் கையேந்தினால் இலவசம். நாம் தமிழர் ஆட்சியில் மற்ற கட்சிகள் போல இலவச துவைக்கும் எந்திரம், குளிரூட்டி போன்றவை வழங்கப்படாது. ஆனால் அவற்றை மக்களே வாங்கி கொள்ளும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும். நாம் தமிழர் ஆட்சியில் அனைவருக்கும் கல்வி, உலக தரத்திலான மருத்துவம், சுகாதாரமான குடிநீர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்” என்று பேசியுள்ளார்.