1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (19:12 IST)

என்னை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி வருவது திமுகதான்: சீமான்

என்னை பற்றியும் கட்சியை பற்றியும் தொடர்ந்து அவதூறு  பரப்பி வருவது திமுகதான் என்றும், அரசுக்கு எதிராக எந்த கருத்தும் சொல்ல கூடாது என்பது என்ன ஜனநாயகம்? என்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மேலும் மீனவர் கைது நடவடிக்கையை இந்திய அரசு கண்டு கொள்வதே இல்லை என்றும், இப்பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதுவது வெறும் கண்துடைப்பு மட்டுமே என்றும் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
ஏழுவர் விடுதலை தொடர்பாக, திமுக ஆளுங்கட்சியான பிறகு அதுபற்றி பேச மறுக்கிறது என்றும், இது சரியான அணுகுமுறை இல்லை என்றும், அதேபோல் ராஜபக்சே திருப்பதி வருவதை நாங்கள் எதிர்ப்போம் என்றும், ஆந்திர அரசு அதைக் அனுமதிக்க கூடாது என்றும் சீமான் கூறியுள்ளார்.