1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (13:35 IST)

திருப்பதி வந்த இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு வரவேற்பு!

இலங்கை பிரதமர் ராஜபக்சே சற்று முன்னர் திருப்பதிக்கு வருகை தந்த நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இலங்கை பிரதமர் ராஜபக்சே இன்று திருப்பதி வர உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளிவந்திருந்த நிலையில் சற்று முன் அவர் திருப்பதிக்கு விமானம் மூலம் வருகை தந்தார். 2 நாள் சுற்றுப்பயணமாக திருப்பதி வந்த இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி வரவேற்பளித்தார்.
 
மேலும் இலங்கை பிரதமர் ராஜபக்சே அவர்களுக்கு ரேணிகுண்டா மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன் உள்பட அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது