தொடர்புடைய செய்திகள்
- 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ”மத்திய மாநில அரசுகள் பதிலக்க வேண்டும்”.. நீதிமன்றம் உத்தரவு
- மீண்டும் தள்ளிப்போகும் நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை!
- சி.ஏ.ஏ எதிர்ப்பு என்ற பெயரில் பயங்கரவாதிகள் போராட்டம் - ஹெச். ராஜா குற்றச்சாட்டு
- நாம் தமிழர் எனும் தீவிரவாதிகள் நாங்கள்... முழங்கிய சீமான்!
- துக்ளக் வாங்கி படிங்கடா புத்தி வரட்டும்... ரஜினி ரசிகர்களுக்கு சீமான் அட்வைஸ்!
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என கூற நீதிமன்றம் யார்? சீமான்
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வேண்டாம் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் இது குறித்து பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது’ என தீர்ப்பளித்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என சொல்ல நீதிமன்றம் யார்? என கேட்கிறேன். குற்றம் செய்கிறவர்கள், கொள்ளை அடிப்பவர்கள், கொலை செய்பவர்கள், ஊழல் செய்ப்வர்களை விசாரித்து தண்டனை கொடுப்பதுதான் நீதிமன்றத்தினுடைய வேலை.
மாணவர்கள் படிப்பு விஷயங்களில் தலையிடுவது என்ன நியாயம். நீங்கள் எல்லாரும் நீட் தேர்வு எழுதித்தான் வந்தீர்களா? இது எப்பேர்ப்பட்ட சர்வாதிகாரம். நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என நீதிமன்றம் முடிவு செய்வதால் இது பாராளுமன்ற, சட்ட மன்ற ஜனநாயகமா அல்லது நீதிமன்ற ஆட்சியா? என இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
