செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 ஜூன் 2021 (12:22 IST)

அதிமுக செஞ்ச தப்பை செய்யாதீங்க.. வெள்ளை அறிக்கை வேணும்! – சீமான் அறிக்கை!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்திலும் அதிகரித்தது. தற்போது தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்துதல், ஊரடங்கு போன்றவற்றால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டுள்ளதாக சமூக நல அமைப்பான அறப்போர் இயக்கம் கள ஆய்வு தகவல்களை வெளியிட்டுள்ளது. தொற்று அதிகரித்து இறப்பு எண்ணிக்கை குறைவாக காட்டப்படுவது உயிரிழப்புகள் மறைக்கப்படுகிறது என்பதையே காட்டுவது போல உள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் “அதிமுகவுக்கு மாற்று என சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக செய்த அதே தவறை செய்யாமல் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு எண்ணிக்கையின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும்!” என கோரிக்கை விடுத்துள்ளார்.