வியாழன், 31 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 ஜூன் 2021 (07:48 IST)

3.15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று சென்னை வருகை: மத்திய அரசு அனுப்புகிறது

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகவும் மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை அனுப்பவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சமீபத்தில் பிரதமர் மோடியை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்த பிறகு தொடர்ச்சியாக தடுப்பூசிகள் தமிழகத்திற்கு மத்திய அரசு அனுப்பி கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி மத்திய அரசு தொகுப்பில் இருந்து 3,14,110 டோஸ் #கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.20 மணிக்கு சென்னை வர உள்ளது. சென்னை வரும் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து தரப்பப்படும்.
 
தமிழகத்தில் தற்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். நேற்று வரை தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்: 29.5% பேர்களும், 45-60 வயதினர்:  38.9% பேர்களும், 18-44 வயதினர்: 31.6% பேர்களும், போட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.