செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:15 IST)

கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

grahma
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி உள்பட ஒரு சில நாட்களில் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் கூடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 
பள்ளி மேலாண்மை குழு கூட்ட தீர்மானங்களை முன்வைத்து கிராம சபைகளில் விவாதிக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.