1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (14:39 IST)

35% கல்வி கட்டணத்தை பிப்ரவரி 28-க்குள் வசூலிக்கலாம்!

நடப்பு கல்வியாண்டுக்கான மீதமுள்ள 35% கட்டணத்தை பிப்ரவரி 28க்குள் வசூலித்து கொள்ளலாம் என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.
 
ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வேண்டியுள்ளதாக நீதிபதி கருத்து. கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு மார்ச் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.
 
முழு கட்டணத்தை வசூலித்த சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிரான புகார் குறித்து நவ. 27க்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு. தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.