வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (09:14 IST)

தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை - தமிழக அரசு

தமிழகத்திலும் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது 
 
முன்னதாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுவதாகவும் பள்ளிகள் திறப்பு குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அடுத்து மாணவர்கள் பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்