சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் : பட தயாரிப்பு நிறுவனம்

sarkar
Last Modified வியாழன், 8 நவம்பர் 2018 (19:05 IST)
சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை  நீக்கப்படுவது குறித்து இன்று இரவு முடிவு செய்யப்படும்.மீண்டும்  நாளை பிற்பகல் முதல் சர்கார் திரையிடப்படும் என படத்தயாரிப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சர்சைக்குரிய காட்சிகளை நீக்கப்படுவது குறித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
 
சென்னையில் ராயப்பேட்டை திரையரங்கில் அதிமுகவினர்ம் இன்று மாலையில்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இந்த காட்சிகள் நீக்கப்படும் என திருப்பூர் சுப்பிரமணியம் பேசினார்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
 
திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கிக்கொண்டதுடன் யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தாயாரிப்பு நிறுவனத்துடன் பேசிவிட்டு அவர்களின் அனுமதியுடன் இந்த தகவல்  கூறியுள்ளார்.
 
மேலும் இப்படத்தில் எந்தெந்த காட்சிகள் நீக்க வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு மீண்டும் படம் நாளை பிற்பகல் வேளையில் படம் திரையிடப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டு அமைதிக்கு திரும்புமாறு மேற்கு மண்டல திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர்  சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :