Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எந்த ராணுவத்தை வைத்தும் பெரியாரை அகற்ற முடியாது - பொங்கி எழுந்த சத்யராஜ்

Last Modified புதன், 7 மார்ச் 2018 (11:40 IST)
பெரியார் சிலை குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ள கருத்திற்கு நடிகர் சத்யராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
தந்தை பெரியாரின் சிலை குறித்து ஹெச்.ராஜா தெரிவித்த கருத்திற்கு தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. அந்நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர் உடைத்தனர். அதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள் சிலர் அவர்களில் 4 பேரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பின் அந்த 4 பேர் மீதும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில், நடிகர் சத்யராஜ ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
திரிபுராவில், தோழர், புரட்சியாளர் லெனின் சிலை உடைப்புக்கு எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். தமிழ்நாட்டிலும் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறிய எச்.ராஜாவை தமிழக அரசு சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பெரியார் என்பது ஒரு சிலையல்ல, ஒரு பெயர் அல்ல, ஒரு உருவமல்ல, ரத்தமும், சதையும், எழும்பும் சார்ந்த ஒரு மனிதப் பிறவி மட்டும் அல்ல, பெரியார் என்பது ஒரு தத்துவம். உழைக்கும் மக்களின் விடுதலைக்காக, பெண்களின் விடுதலைக்காக, மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம். 
 
வாழ்ந்து வருகிறார். எந்த பதவியை வைத்தும், சக்தியை வைத்தும், எந்த இராணுவத்தை வைத்தும் எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நேரம் குறித்து தேதி குறித்தால், பெரியார் தொண்டர்கள் சவாலை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எச்.ராஜா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :