செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:22 IST)

அதிமுக அலுவலகத்திற்கு சசிகலா வர வாய்ப்பு இல்லை - அமைச்சர் ஜெயகுமார்

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் ரிலீஸானார். பின்னர் கடந்த 8 ஆம் தேதி தமிழகம் வந்தார். அப்போது அவருக்கு அதிமுக கொடியுடைய காரை அதிமுக நிர்வாகிகள் 7 பேர் கொடுத்தனர்.
 
இதுதொடர்பாக ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டனர், அதில்,  சசிகலாவுக்கு உதவியதாக 7 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினர். தமிழகம் வந்தடைந்த சசிகலா, விரைவில் எல்லோரையும் சந்திக்கவுள்ளதாகவும், அன்புக்கு அடிமைல் அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன் எனக் கூறினார்.
 
இந்நிலையில் தற்போது சசிகலாவின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார்,  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வர வாய்ப்பே இல்லை என கூறிய அவர், கடல் வத்தி மீன் தின்ன காத்திருந்த கொக்கு தொண்டை வத்தி செத்தது என்பது போல் தான் சசிகலாவின் நிலமை என தெரிவித்துள்ளார்.