திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2018 (04:30 IST)

திருவான்மியூர் டூ தியாகராய நகர்: பேருந்தில் சரத்குமார் பயணம் செய்தது ஏன்?

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று சென்னை அரசு பேருந்தில் திருவான்மியூரில் இருந்து தியாகராயநகருக்கு 47ஏ என்ற பேருந்தில் பயணம் செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பேருந்து கட்டண உயர்வு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வதற்காகவே பேருந்தில் பயணம் செய்ததாக கூறினார். அந்த அறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு

பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு மக்களின் மனநிலையையும், அவர்களின் பொருளாதார பாதிப்பின் அளவையும் நேரிடையாக அறிந்து கொள்ளும் பொருட்டு 25–1–2018 அன்று சென்னை திருவான்மியூரில் இருந்து தியாகராயநகர் செல்லும் 47 ஏ பஸ்சில் பயணம் செய்தேன். பஸ்சில் கூட்டம் இல்லாததற்கு கட்டண உயர்வு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. பொருளாதார நெருக்கடி, சிக்கல்கள் அரசாங்கத்திற்கு இருந்தாலும், மக்கள் இந்த அதிரடி கட்டண உயர்வு என்ற பாரத்தை தாங்கக்கூடிய அளவில் இருக்கிறார்களா? என்று அறிந்து தக்க முறையில் திட்டமிட்டு செயல்படுத்தி இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிகிறது.

பொதுமக்களின் பொருளாதார நிலைமையையும், துன்ப துயரங்களை அறிந்து கொள்ள அவர்களுடன் சேர்ந்து நாமும் சமூகத்தில் ஒன்றாக பயணித்தால் தான் அவர்களுடைய நிலைமை புரியும்.

இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.