புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 18 நவம்பர் 2018 (10:48 IST)

வாழ வேணா விடுவோம், ஆள விடமாட்டோம்: ரஜினியை விளாசிய சரத்குமார்

7 பேர் விடுதலை குறித்து தெரியாது என கூறிய ரஜினிகாந்தை சரத்குமார் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
ரஜினிகாந்திடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, எந்த ஏழு பேர் என எதிர்கேள்வி கேட்டார். பின்னர் ராஜிவ் கொலை வழக்கு என தெளியபடுத்தப்பட்ட பின்னர் எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன் என மழுப்பல் பதில் அளித்தார். இதனை சமாளிக்க பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, செய்தியாளர் என்னிடம் ஒழுங்காக கேள்வியே கேட்கவில்லை. தெளிவாக கேள்வி கேட்டிருந்தால் நான் பதில் கூறியிருப்பேன் என சமாளித்தார்.
 
ரஜினிக்கு இதுகூட தெரியாதா என பல்வேறு தரப்பினர் தங்களின் விமர்சனங்களை முன்வைத்தனர்.
 
இந்நிலையில் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் 7 தமிழர்களை பற்றி தெரியாதவர்கள் தமிழக அரசியல் பேசக் கூடாது. வந்தாரை வாழ வைப்போம். ஆள வைக்க விட மாட்டோம் என ரஜினியை காட்டமாக விமர்சித்து பேசினார்.