தலைமறைவான சந்தானம் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல்


sivalingam| Last Modified செவ்வாய், 10 அக்டோபர் 2017 (15:10 IST)
பிரபல வழக்கறிஞர் மற்றும் பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்த் என்பவரை நடிகர் சந்தானம் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சந்தானம் திடீரென தலைமறைவானார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில் எந்த நேரமும் சந்தானம் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.


 
 
இந்த நிலையில் வழக்கறிஞரை தாக்கிய புகாரில் சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சந்தானம் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
சந்தானம் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகசுந்தரம் ஆகிய இருவர் மீதும் போலீசார் 506(1) கொலை மிரட்டல் விடுத்தல், 294(பி) அவதூறான வார்த்தைகளில் பேசுதல், காயம் விலைவித்தல் தாக்குதல் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :