திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (14:06 IST)

நீரா பானம் விற்பனை நிலையத்தை தொடங்கிவைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக நீரா பானம் விற்பனை நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
 

தென்னை விவசாயிகளின் நலனை பேணிக் காக்கும் வகையில் தமிழகத்தில் நீரா பானம் இறக்கிக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட தென்னை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி விவசாய சங்கத்தை சார்ந்த விவசாயிகள் 5 பேர் மாவட்டத்தில் முதன் முறையாக அனுமதி பெற்றனர்.

இதனையடுத்து நாள்தோறும் இறக்கப்படும் நீரா பானத்துக்கான விற்பனை மையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் - கோவை சாலையில் பரமத்தியில் திறந்து வைத்தார். அப்போது நீரா இறக்கும் முறை அதிலிருந்து வேறு என்ன மதிப்பு கூட்டும் பொருட்கள தயாரிக்கிறீர்கள் என்பது குறித்து கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வறட்சி காலங்களில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் நோக்குடன் இந்த நீரா பானம் இறக்கும் திட்டத்திற்கு முதல்வர் அனுமது அளித்ததாகவும், கேடு விளைவிக்கும் வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்த்து உடலுக்கு தீமை விளைவிக்காத நீரா பானத்தை அனைவரும் அருந்த வேண்டும் என்றார்.