மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் : எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோ
நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அந்த பதிவில் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவு படுத்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பத்திரிக்கையாளர் சங்கங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும், அவரது வீட்டின் மீது கற்களை வீசியும் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், யாரையும் காயப்படுத்தும் எண்ணம் தனக்கில்லை என அவர் பேசியுள்ளார்.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....