திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 ஏப்ரல் 2018 (15:12 IST)

சிறுமிகள் கற்பழிப்பில் முதலிடத்தை பிடித்தது மத்தியப்பிரதேசம்

இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மத்தியப்பிரேதச மாநிலத்தில் அதிக அளவில் நடப்பதாக தெரியவந்துள்ளது.

 
நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியில் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் அதிக அளவில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.


 
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவண அறிக்கைப்படி கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 2467 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்தியப்பிரேதச மாநிலத்தில் 90 சதவித சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக அரசு சார்பில் எதாவது நடவடிக்கை எடுக்குபடுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.