பிச்சை எடுக்க மலேசியா வந்தீர்களா? - எஸ்.வி.சேகர் கூறிய அதிர்ச்சி செய்தி

Last Modified புதன், 10 ஜனவரி 2018 (17:09 IST)
நட்சத்திர கலைவிழா நடத்த மலேசிய சென்ற போது பல அவமானங்களை சந்தித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் பொறுப்பில் இருந்த எஸ்.வி.சேகர், நேற்று முன்தினம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் மூத்த நடிகர்கள் மரியாதையாக  நடத்தப்படவில்லை என அவர் காரணம் தெரிவித்திருந்தார். 
 
அந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்துப் பேசிய எஸ்.வி.சேகர், “நட்சத்திரக் கலைவிழாவில் கலந்துகொள்ள அஜித்தையும் அழைத்தோம். மக்கள் காசு கொடுத்து வாங்கும் டிக்கெட்டில் இருந்துதான் நாம் சம்பாதிக்கிறோம். எனவே, நாமே காசு போட்டு நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டலாம் என்று சொன்ன அஜித், விழாவுக்கு வர மறுத்துவிட்டார்.
 
பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சென்னை விமான நிலையத்திலேயே டிக்கெட் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். அதோடு, பிச்சை எடுப்பதற்காக இந்த ஊருக்கு வருகிறீர்களா என மலேசிய பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டனர். ஒரு லட்சம் பேர் அமரும் அரங்கில் வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே இருந்தனர்.
 
கமல், ரஜினி போல் நானும் மூத்த நடிகர்தான். எனவே, அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை எனக்கும் வேண்டும் என கேட்டேன். பார்க் ஹோட்டலில் ஒரு தளத்தை எடுத்து விழாவிற்கு திட்டமிட்டனர். அது தேவையில்லாத செலவு” என அவர் பொங்கியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :