ஹரிஷ் கல்யாணை விஜய்க்கு தூது விட்ட ரசிகை

Harish Kalyan
Last Updated: புதன், 10 ஜனவரி 2018 (16:53 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாணிடம் தான் வரைந்த படத்தை கொடுத்து விஜய்யிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார் விஜய் ரசிகை ஒருவர்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடத்தில் பிரபலமனவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரைஸாவுடன் சேர்ந்து பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 
தற்போது மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திட விழாவிற்கு சென்ற ஹரிஷ் கல்யாணிடன் விஜய் ரசிகை ஒருவர் தான் வரைந்த மெர்சல் விஜய் புகைப்படத்தை கொடுத்து விஜய்யிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். 
 
இதனை ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் ரசிகையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார். மேலும் விலைமதிப்பற்ற தருணம் என்றும் கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :