Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரெய்டின் பின்னணியில் இருக்கும் ரூ. 900 கோடி: கண்டுபிடிக்க முடியாமல் திணறும் வருமான வரித்துறை!

ரெய்டின் பின்னணியில் இருக்கும் ரூ. 900 கோடி: கண்டுபிடிக்க முடியாமல் திணறும் வருமான வரித்துறை!


Caston| Last Updated: வெள்ளி, 10 நவம்பர் 2017 (09:50 IST)
இந்தியாவிலேயே மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனை என கூறப்படும் சசிகலா, தினகரன் குடும்பத்தினர் வீட்டில் நடத்தப்படும் இந்த வருமான வரித்துறை சோதனை 900 கோடி ரூபாயை குறி வைத்து நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

 
 
ஓபிஎஸ், ஈபிஎஸ் வசம் இருந்து அதிமுக, சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கிடைத்த தகவல் படி பாஜக இந்த அதிரடி வருமான வரித்துறை சோதனையை நடத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் எப்படி கணக்கு போட்டாலும் மொத்தம் 900 கோடி ரூபாய் பணம் தான் அவர்களிடம் உள்ளதாக டெல்லி தரப்பு போட்ட கணக்கில் வருகிறது. இருந்தாலும் அந்த 900 கோடி ரூபாய் எங்கு யாரிடம் உள்ளது என்பது தான் யாருக்கும் தெரியவில்லை.
 
இந்த 900 கோடி ரூபாயும் சசிகலா குடும்பத்தினர் உழைச்சு சம்பாதித்தது இல்லை. எனவே அதனை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டு இந்த சோதனையை டெல்லி தரப்பு நடத்தி வருகிறது. அதனால் தான் 190 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.
 
ஆனால் இந்த 900 கோடி ரூபாயை கைப்பற்ற முடியாமலும் அதற்கான ஆவணங்கள் கிடைக்காமலும் வருமான வரித்துறையினர் திணறி வருவதாக கூறப்படுகிறது. அந்த 900 கோடி ரூபாய் எங்கு இருக்கிறது என்பது தெரிந்த ஒரே நபர் சசிகலா தான் என கூறப்படுகிறது. அவர் சொன்னால் ஒழிய வேறு யாருக்கும் அந்த தகவல் தெரியாது என பேசப்படுகிறது. இதனால் தான் டிடிவி தினகரன் ரெய்டு தொடர்பாக விமர்சித்தும், தைரியமாகவும் பேசி வருவதாக தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :